மோகனூர்:
மோகனூரை அடுத்த மாடகாசம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகள் ரேணுகா (வயது 23). இவருக்கு, பரமத்திவேலூர் வீரணாம்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ரேணுகா கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 15-ந் தேதி மோகனூர் அருகே உள்ள கணவாய்ப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரேணுகா பலியானார். இந்த தற்கொலை குறித்து மோகனூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.