திருச்செங்கோட்டில் ரூ.2 கோடிக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோட்டில் ரூ.2 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடந்தது.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த 3 ஆயிரத்து 500 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 200 முதல் ரூ.10 ஆயிரத்து 93 வரையும், கிழக்கு ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 299 முதல் ரூ.7 ஆயிரத்து 919 வரையும், பனங்காளி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 999 முதல் ரூ.20 ஆயிரத்து 799 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடந்தது.