ஜோலார்பேட்டை அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

ஜோலார்பேட்டை அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-19 17:44 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பெரியமூக்கனூர் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42), விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜின் பெரியப்பா கோவிந்தசாமி, சித்தப்பா முத்து ஆகிய 3 குடும்பத்தினருக்கு பொதுவான 10 அடி வழி உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி நாகராஜ் பொது வழியில் நடந்து சென்ற போது தங்கம் என்பவரின் மகன்கள் முருகன் (24), மணிகண்டன் (22), முத்துவின் மனைவி இந்திராணி, கோவிந்தசாமி மகன் பூபதி (46) ஆகியோர் நாகராஜை ஏன் இந்த வழியில் போகிறாய் எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன், மணிகண்டன், இந்திராணி, பூபதி ஆகிய 4 பேரும் சேர்ந்து மரக்கட்டை, கல் போன்றவற்றால் நாகராஜியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், மணிகண்டன், பூபதி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்