மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
வேலூர்
காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி இறந்து விட்டதால் அவர் தனது மகளுடன் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு தனது கள்ளக்காதலியை அழைத்து வந்து மகள் கண்ணெதிரே உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து தொழிலாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.