கிருஷ்ணகிரியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை கணபதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த 17-ந் தேதி இரவு நாய் ஒன்றை மணிகண்டன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை ரமேஷ் தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரமேசை மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அஜித் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் காமராஜ் என்பவரை தேடி வருகிறார்கள்.