பழனியாண்டவர் கோவில் குடமுழுக்கு
வாய்மேடு பழனியாண்டவர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
வாய்மேடு:
வாய்மேடு பழனியாண்டவர் கோவில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் சொர்ணகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றது. .தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.