முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

ஆரணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

Update: 2022-03-19 15:44 GMT
ஆரணி

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 1972-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது அரசு துறையில் பல்வேறு பிரிவுகளில் உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்றுள்ளனர். 

அதில் முன்னாள் மாணவரான டி.ஞானசேகரன், வெங்கடேசன், மோகன், எம்.பார்த்திபன், கே.பி.கே.செல்வராஜ், எஸ்.ராஜேந்திரன், ஏ.ராஜா ஆகியோர் ஒருங்கிணைந்து தற்போது சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுடன் ஒரு நன்னம்பிக்கை சந்திப்பு என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். 

கூட்டத்தில் மாணவர்களுக்கான வாய்ப்புகளும் வழிமுறைகளும், வல்லுனர்களுக்கான வழிகாட்டுதல், சீரிய சிந்தனைகளும், சிற்பிகளின் பங்களிப்பும் என்ற தலைப்புகளில் விளக்கம் அளித்து பேசினர்.

 கூட்டத்தில் பள்ளி தலைமைஆசிரியை மகேஸ்வரி, உதவி தலைமைஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்