வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி

தூசி அருகே வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி

Update: 2022-03-19 14:40 GMT
தூசி

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த வாரம் காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் கிராமத்தில் கட்டிட வேலைக்கு வந்தார். 

பின்னர் வேலை முடித்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது தூசி அருகே வெள்ளாகுளம் கிராமம் கூட்டு சாலை அருகில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பத் படுகாயம் அடைந்தார். 

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர் பன்னீர் கொடுத்த புகாரின்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்