சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு குறைத்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு குறைத்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்

Update: 2022-03-19 14:27 GMT

கோவை

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு குறைத்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

சிறுவாணி அணை

கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி கடந்த 3 வருடங்களாக சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பது இல்லை. 

அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறுவாணி அணையில் இருந்து அதிகப்படியான நீரை ஆற்றில் திறந்துவிட்டு நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்து உள்ளது.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். 

ஆனாலும் அணையின் நீர்மட்டத்தை குறைந்ததால் சிறுவாணி அணையில் இருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்து உள்ளது. 

குடிநீர் அளவு

இதனால் குடிநீர் வினியோக திட்டத்தை இயக்கி பராமரித்து வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 90 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 60 மில்லியன் லிட்ட ருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது.

இதனால் சிறுவாணி குடிநீர் வினியோக பகுதிகளில் குடிநீர் வினி யோக நாட்கள் இடைவெளி அதிகமாகி உள்ளது. 

இதை நேர் செய்யும் பொருட்டு பில்லூர் குடிநீர் திட்டத்தில் கூடுதல் நீருந்திகள் பயன்ப டுத்தி கூடுதலாக நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒத்துழைக்க வேண்டும்

இதன் மூலம் பில்லூர் நீரை சிறுவாணி பகுதியுடன் பகிர்ந்து பில்லூர் மற்றும் சிறுவாணி வினியோக பகுதிகள் இரண்டிலும் ஒரே மாதிரி சீரான இடைவெளியுடன் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அடுத்து வரும் மழைக்காலம் வரை பில்லூர் மற்றும் சிறுவாணி நீர் பயன்பாட்டு பகுதிகள் அனைத்துக்கும் குடிநீர் இடைவெளி காலத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்