அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த சோதனை நடைபெற்றது. ஊட்டி நகர்நல அலுவலர் ஸ்ரீதர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கடைகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தடை செய்த பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்கு வைத்திருந்ததும், உணவு பொருட்கள், மளிகை பொருட்களை பேக்கிங் செய்து வழங்க பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதற்கிடையே சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்ததை கண்டித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.