5 மண்டலங்களில் வார்டு குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்
திருச்சி மாநகராட்சியில் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களில் வார்டு குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
திருச்சி, மார்ச்.20-
திருச்சி மாநகராட்சியில் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களில் வார்டு குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடத்தப்பட்டு 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தி.மு.க. 49 வார்டுகளை கைப்பற்றி பெரும்பான்மையான இடத்தை பெற்றது.
காங்கிரஸ் கட்சி 5 வார்டுகளிலும், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை தலா ஒரு வார்டிலும் என்று தி.மு.க. கூட்டணி 59 வார்டுகளில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆனார்கள்.
மேயர், துணை மேயர்
அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன் மேயராகவும் மற்றும் திவ்யா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளனர். தேர்தலுக்கு பின்னர், திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களையும் மறுவரையறை செய்து 5 மண்டலங்களாக பிரித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த ஆணைப்படி, தற்போது ஒரு மண்டலத்திற்கு 13 வார்டுகள் வீதம் பிரிக்கப்பட்டு புதிதாக 5 மண்டலங்களாக (வார்டு குழு) உருவெடுத்தன. இந்தநிலையில் வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் அறிவிப்பை, திருச்சி மாநகராட்சி ஆணையரும், மாநகராட்சி தேர்தல் அலுவலருமான முஜிபுர்ரகுமான் வெளியிட்டுள்ளார்.
மறைமுக தேர்தல்
அதன்படி திருச்சி மாநகராட்சி வார்டு குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல், வருகிற 30-ந் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கவுள்ளது. அன்று மதியம் 2:30 மணிக்கு, நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான, மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில், கணக்கு குழு, பொது சுகாதார குழு, கல்விக்குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு, பணிகள் குழு என 6 குழுக்களுக்கும் தலா 9 கவுன்சிலர்கள் வீதம் 54 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இவற்றில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு என்பதால், ஒரு குழுவில் தலா 5 இடம் பெண் கவுன்சிலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள 54 கவுன்சிலர்களில், 30 பேர் பெண்களாக இருப்பார்கள்.
வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு, மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் இக்குழுவின் உறுப்பினராக ஒரு கவுன்சிலர் மட்டும் தேர்வு செய்யப்படுவார். அன்று மதியம் 2.30 மணிக்கு, 6 நிலைக்குழுக்களுக்கான தலைவர்கள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.