உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தேரை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தேரை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது

Update: 2022-03-19 13:14 GMT
உடுமலை;
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி,
தேரை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வருகின்ற அமாவாசை தினத்தையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 17-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 20-ந்தேதி  மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 21-ந்தேதி  காலை 6.45 மணிக்கு அம்மன், சுவாமிடன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டம்
அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேர், கோவில் வளாகத்தில் உள்ள தேர்நிலையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி சாலை, தளிசாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடைவீதி, கொல்லம் பட்டறை வழியாக பொள்ளாச்சி சாலையில் கோவில் வளாகத்தில் உள்ள தேர்நிலையை வந்தடையும்.
இந்த தேரை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீரீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், யு.எஸ்.சஞ்சீவ்சுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்