திருச்சியில் காவலாளி மர்ம சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருச்சி, மார்ச்.20-
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
காவலாளி மர்ம சாவு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் முருகன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் தங்கியிருந்த வீட்டில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த சுப்பிரமணி, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கம்பியில் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் வெளிச்சுவரை ஒட்டியவாறு மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
காரணம் என்ன?
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.