சிறுவன் அடித்து கொலை
16 வயது சிறுவனை அடித்து ெகாலை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜால்னா மாவட்டம் அம்பாட் தாலுகா பட்டான் மொகல்லா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 12-ந் தேதி மதியம் 1 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் குளிக்க நண்பருடன் சென்றான். இது பற்றி அறிந்த எதிரணியை சேர்ந்த சிறுவர்கள் உள்பட கும்பல் அங்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவனை உருட்டு கட்டையால் சராமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தான்.
இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் 15 பேர் சேர்ந்து சிறுவனை தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறுவனை அடித்து கொன்றதாக 9 பேரை பிடித்து கைது செய்தனர். இதி்ல 4 பேர் சிறுவர்கள் என்பதால் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்றவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.