போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

Update: 2022-03-19 12:23 GMT
திருச்சி, மார்ச்.20-
திருச்சி மாநகரத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி கண்டோன்மெண்ட் சரகத்திற்குட்பட்ட போலீஸ்- பொதுமக்கள் இடையே உள்அரங்க கிரிக்கெட்  போட்டி தனியார் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதேபோல் அனைத்து காவல் சரகங்களிலும் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்