தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம்
வன பணியாளர்களுக்கு தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் இன்று வன பணியாளர்களுக்கு வனத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் வன உயர் அடுக்கு குழுவை சேர்ந்தவர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது வனத்தீயில் சிக்கி கொண்டவர்களை எப்படி மீட்பது, வனத்தீயை எப்படி அணைப்பது, தீயில் காயம் அடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.