பூனைக்கு பால் வைக்க சென்றபோது பரிதாபம்: 3-வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் சாவு

3-வது மாடியில் பூனைக்கு பால் வைக்க சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-19 07:05 GMT
சென்னை,

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 29). பட்டதாரியான இவர், வேலை இல்லாமல் இருந்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவர் 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேம்குமார் பூனைக்கு பால் வைப்பதற்காக அவரது வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரேம்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்