சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது

Update: 2022-03-18 21:28 GMT
வாடிப்பட்டி
திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மேலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கல்லணையை சேர்ந்த காளிராஜ்(வயது 34) என்பவர், ராணுவ வீரரின் ஒரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தந்தையிடம் கூறினார். இதையடுத்து அவர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளிராஜை போக்சோ சட்டத்தின்படி கைது செய்தனர்.

மேலும் செய்திகள்