குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Update: 2022-03-18 21:28 GMT
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வலையபட்டி. இந்த கிராமத்திற்கு கடந்த இரு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் உசிலம்பட்டி-பேரையூர் நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மேலும் பண்ணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இரு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த தால் சாலை மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்