கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.

Update: 2022-03-18 21:13 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 36 ஆயிரத்து 326 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 84 பேர் உள்ளனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் 154 பேர் குணம் அடைந்தனர். கொரோனா உயிரிழப்பு விகிதம் 4.71 ஆக உள்ளது. 2,013 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு நகர் தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு 5-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்