பங்குனி உத்திரத்தையொட்டி பஸ்நிலையத்தில் அலைமோதிய பயணிகள்

பங்குனி உத்திரத்தையொட்டி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-03-18 20:45 GMT
நெல்லை:
பங்குனி உத்திரத்தையொட்டி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கலிட்டும், மாலை சாத்தி அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். மேலும் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கைகொண்டார் சாஸ்தா கோவில், கடையம் அருகே சூட்சமுடையார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் அதிகாலையில் இருந்து பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கலிடுதல், படையல் பூஜை போடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

அலைமோதிய கூட்டம்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்