செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி
செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:-
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அம்புரோஸ் பர்வீன் (வயது 38). இவருடைய செல்போன் எண்ணுக்கு குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக வந்த தகவலை தொடர்ந்து அவர், ஆவணங்கள் சரிபார்க்க ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அம்புரோஸ் பர்வீன் உணர்ந்தார். இதேபோன்று உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த பாரதி (33) என்பவரும் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி வேலை வாய்ப்புக்காக ரூ.78 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்தார்.
இது குறித்து இருவரும் தனித்தனியாக சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.