தோகைமலை,
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றதாக பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி மலர்க்கொடி (வயது 45), கல்லடையை சேர்ந்த முத்துச்சாமி (62), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு வீதியை சேர்ந்த தென்னரசு (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.