கல்லாவி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கல்லாவி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கல்லாவி அருகே மேட்டு சூளகரையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 6-ம் வகுப்பு மாணவர்கள் தேசிங்கு, ஷியாம், காரல்மார்க்ஸ், சாரதி, தீபன் ராஜ், தமிழினியன், ஆகாஷ் ஆகிய 7 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் வயிற்று வலியும் வந்தது. இதனால் மாணவர்களை அவர்களின் பெற்றோர் கல்லாவி அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லாவி போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.