சூளகிரியில் ஊருக்குள் வந்த புள்ளிமான் மீட்பு

சூளகிரியில் ஊருக்குள் வந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

Update: 2022-03-18 18:09 GMT
சூளகிரி:
சூளகிரி மலைப்பகுதியில் இருந்து ஒரு பெண் புள்ளிமான் இரை தேடி, சூளகிரி ஊருக்குள் வந்தது. வாணியர் தெருவில் ஓடிய அந்த மானை தெருநாய்கள் விரட்டி சென்று கடித்து குதறின. பின்னர் அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு, காயங்களுக்கு மருந்து போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து மானை மீட்டு, ஓசூர் மத்திகிரியில் உள்ள வனத்துறையின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். 

மேலும் செய்திகள்