தர்மபுரியில் பதிவுமூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க கூட்டம்

தர்மபுரியில் பதிவுமூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-03-18 18:09 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பதிவுமூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி சிவக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரபாகரன், செந்தில், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பதிவு மூப்பு அடிப்படையில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் கோரிக்கை கவன ஈர்ப்பு அமைதி உண்ணாவிரதத்தில் அனைவரும் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
----

மேலும் செய்திகள்