ஆற்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை எரித்த வாலிபர் கைது
ஆற்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கண்ணமங்கலம், கூட்ரோடு, அண்ணா நகர் மற்றும் கீழ்விஷாரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 புல்லட் மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றை மர்மநபர் தீவைத்து எரித்து விட்டதாக அப்பகுதி மக்கள் ஆர்காடு டவுன் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்த கார்த்திக் ரோகித் (வயது 23) என்பவர் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.