பள்ளி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

Update: 2022-03-18 17:27 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில்  6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஜெயசீலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இது பற்றி அறிந்ததும் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிக்கு ஆசிரியர் ஜெயசீலன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிந்தது. இதையடுத்து ஆசிரியர் ஜெயசீலனை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் ஜோசப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்