ரூ.5 லட்சம் கட்டண பாக்கி போலீஸ் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

ரூ.5 லட்சம் கட்டண பாக்கி வைத்திருந்த போலீஸ் நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2022-03-18 17:05 GMT
கோப்பு படம்
மும்பை, 
ரூ.5 லட்சம் கட்டண பாக்கி வைத்திருந்த போலீஸ் நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
கட்டண பாக்கி
தானே மாவட்டத்தில் வாசிந்த் போலீஸ் நிலையத்திற்கு சாகாப்பூர் பிரிவு மாநில மின்சார வினியோக நிறுவனத்தால் மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்து வந்தது. 
இதனால் அந்த போலீஸ் நிலையத்தின் மின் கட்டண நிலுவை தொகை ரூ.5 லட்சத்தை கடந்தது. இதையடுத்து மாநில மின்சார வினியோக நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த போலீஸ் நிலையத்தின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர். 
 கடும் வாக்குவாதம்
முன்னதாக இந்த மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது, மாநில மின்சார வினியோக நிறுவனத்தின் துணை நிர்வாக என்ஜினீயர் ஏ.ஜி.கடக்வாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வீடியோவானது வேகமாக பரவியது. 

மேலும் செய்திகள்