பல்லவன் விரைவு ரெயில் நேரம் மாற்றம்

காரைக்குடியில் இருந்து புறப்படும் பல்லவன் விரைவு ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-03-18 16:21 GMT
காரைக்குடி, 
காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை தினந்தோறும் அதிகாலை 5.05 மணிக்கு பல்லவன் விரைவு ரெயில் (வண்டி எண்- 1206) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னையை சென்றடைந்தது. இந்தநிலையில் தற்போது காரைக்குடியில் இருந்து திருச்சி வரையிலான ரெயில்வே வழித்தடம் மின் வழித்தடமாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் இயங்கி வருவதால் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து மாலை 3.45மணிக்கு புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். இந்த தகவலை தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே காரைக்குடி வழியாக திருச்சியில் இருந்து மானாமதுரை வரை சென்ற பயணிகள் ரெயில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்தநிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 1- ந்தேதி முதல் இந்த பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண்- 06829) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மதியம் 11.20 மணிக்கு வந்தடைகிறது. அதன் பின்னர் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு மானாமதுரைக்கு மதியம் 12.50மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அதே ரெயில் (வண்டி எண்- 06830) மீண்டும் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சிவகங்கைக்கு மதியம் 2.40 மணிக்கும், காரைக்குடிக்கு மதியம் 3.30 மணிக்கும் வந்தடைகிறது. மீண்டும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்று மாலை 5.30 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது. இந்த ரெயில் விரைவில் மன்னார்குடி வரை இயக்கப்பட உள்ளது. இந்த தகவலையும் தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மீண்டும் திருச்சி-மானாமதுரை ரெயில் இயக்கப்பட உள்ளததற்கு காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும் செய்திகள்