சிவகங்கை,
மேலூர் அருகே உள்ள வல்லடியார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி காளையார்கோவிலை அடுத்த ஏரிவயலை சேர்ந்த ராமகண்ணன் (வயது50), சிவந்தநேந்தலை சேர்ந்த சேகர் (45) மற்றும் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேலு (36) ஆகிய 3 பேரும் சமையல் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில்ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது இந்த விபத்தில் மோட்டார் சை்க்கிளில் வந்த ராமகண்ணன் மற்றும் சேகர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பழனிவேலு படுகாயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனி வேலுவை சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சிவகங்கை நகர் பொலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.