திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசனம் நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆழித்தேரோட்ட விழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பூதம், யானை என பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர்-தருனேந்தசேகரி அம்பாளுடன் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா கடந்த 15-ந்தேதி நடைபெற்றது.
பாத தரிசனம் நிகழ்ச்சி
தீர்த்தவாரி நிகழ்ச்சியை அடுத்து சபாபதி மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை நற்பதஞ்சலி வியாக்ரபாத மகரிஷிகளுக்கு தியாகராஜசாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.