ஊரக வளர்ச்சித்துறை பணிகளை 31-ந் தேதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடக்கும் பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடக்கும் பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமமந்திரி வீடுவழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுதிட்டம், நமக்குநாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்டம், பள்ளிகட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடிகட்டிடங்கள் பழுதுநீக்கம் செய்தல் போன்ற திட்ட பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
31-ந் தேதிக்குள்
மேலும் மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்துவது, விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்துவது பற்றியும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர் மாவட்ட ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.