தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ சட்டம், கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற நாகூர் ஹனிபா மகன் யாசர் அராபத் (வயது 25), தாளமுத்துநகர், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் அனிபா மரைக்காயர் (23) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்தனர். இதே போன்று தருவைகுளம் வி.கழுகாசலபுரத்தை சேர்ந்த மரிய மைக்கேல் மகன் மணி (56) என்பவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், யாசர் அராபத், அனிபா மரைக்காயர், மணி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.