ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தகவல் கொடுத்தால் சன்மானம்
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
திருச்சி, மார்ச்.19-
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
ராமஜெயம் கொலை
தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையிலும் முன்னேற்றமின்றி கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என ராமஜெயத்தின் மனைவி லதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழிந்தபின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
ராமஜெயத்துக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பல விரோதிகள் இருந்ததால் வழக்கில் அடுத்த கட்ட நகர்வு எதுவும் இல்லாமல் போலீசார் தடுமாறி வந்தனர். ஆனால் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்ததும் சில மாதங்களில் குற்றவாளிகள் யார்? என தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. தரப்பில் 4 ஆண்டுகள் மேற்கொண்ட விசாரணையிலும் கொலையாளிகள் குறித்து தெரியவில்லை.
சிறப்பு புலனாய்வுக்குழு
இதனால் ராமஜெயத்தின் சகோதரர் ரவிசந்திரன், ராமஜெயம் கொலை வழக்கை தமிழக போலீசாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரிக்கலாம் என்றும், சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம் பெறும் போலீசாரின் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த பட்டியலின் அடிப்படையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்றும், சிறப்பு புலனாய்வு குழுவை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல்அக்தர் மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த குழுவினர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
சூப்பிரண்டு பேட்டி
இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் திருச்சியில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளோம். இதற்காக 45 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளிடம் விசாரணை
இந்த தனிப்படை போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவைக்கு ஏற்ப காவல் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், கடலூர், புதுச்்சேரி, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தேகத்துக்கிடமான கைதிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் கொடுத்தால் சன்மானம்
இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணையில் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் கீழ்கண்ட காவல் அதிகாரிகளை நேரிலோ தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். சரியான தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்:-
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்- 90806 16241,
துணை போலீஸ் சூப்பிரண்டு மதன்- 94981 20467, 70940 12599. இ-மெயில்: rmathan1970@gmail.com
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.