குடியாத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

குடியாத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-03-18 13:20 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ரூ.2 லட்சம் திருட்டு

குடியாத்தம் டவுன் ஜி.பி.எம். தெருவில் ஜே.என்.கே.பிரபாகரன் ென்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடையில் கடந்த சில தினங்களாக வசூலான ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை டிராயரில் வைத்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றுவிட்டார். கடை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்ற போது மேஜை டிராயர் திறந்திருந்தது. அதில் இருந்த பில்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். டிராயரில் இருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை. கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது அதில் உள்ள ஹார்டு டிஸ்க் மற்றும் டி.டி.ஆர். கருவிகளும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. 

போலீஸ் விசாரணை

கடைக்கு பின்புறம் புதிதாக மாடிவீடு கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்த ஏணி மூலம் இந்த கட்டிடத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரபாகரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற சூப்பர் மார்க்கெட்டில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்