திருட்டு வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூந்தோட்டம் டெலிபோன் காலனியை சேர்ந்த சந்திரசேகர் மகன் விஜய் (வயது 41) என்பவரை திருட்டு வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விஜய் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு, விஜய்க்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விஜயை தென்பாகம் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.