நிலப் பிரச்சினை தொடர்பாக கோஷ்டி மோதல்
களம்பூர் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக கோஷ்டி மோதல் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஆரணி
களம்பூரை அடுத்த முனியன்குடிசை கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 53). இவரின் மகன் மகாதேவன் (27). சாந்தமூர்த்தியின் தம்பி பிரபு (50), இவரின் மகன் பார்த்தசாரதி (19).
மேலும் முனியன் குடிசை ரோடு தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (35), இவரின் தந்தை சுப்பிரமணி (70), உறவினர் வெங்கடேசன் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக நிலப் பிரச்சினை இருந்து வருகிறது.
இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சாந்தமூர்த்தி பிரச்சினைக்குரிய நிலம் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றதாகத் தெரிகிறது. ஏன் இந்த வழியாக டிராக்டரை ஓட்டி வரலாம்? எனக்கேட்டு வாய்த்தகராறு ஏற்பட்டது.
சாந்தமூர்த்திக்கு ஆதரவாக பிரபு, தேவன், பார்த்தசாரதியும், பார்த்திபனுக்கு ஆதரவாக சுப்பிரமணி, வெங்கடேசனும் தகராறில் ஈடுபட்ட கட்டையால் ஒருவரை ஒருவர் தாங்கி கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதில் படுகாயம் அடைந்த சாந்தமூர்த்தி ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல் பார்த்திபனும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து சாந்தமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் தனித்தனியாக களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்கண்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.