டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு தாக்கி ஆடு பலி

டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு தாக்கி ஆடு செத்தது.

Update: 2022-03-17 22:28 GMT
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் தொட்டாமாயா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நல்லாயாள் (வயது70). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடுகள் மற்றும் மாடு வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் உள்ள ஆடுகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த நல்லாயாள் வெளியில் வந்து பார்த்தபோது ஒரு ஆடு ரத்த காயத்துடனும்,  2 ஆடுகள் படுகாயத்துடனும் கிடந்ததை பார்த்தார். அவற்றின் அருகே ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. எனவே அங்கு வந்த ஒரு மர்ம விலங்கு ஆட்டை கடித்து கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று கால்தடத்தை ஆய்வு செய்தனர். மேலும் மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கேமரா பொருத்தியுள்ளனர். தொட்டாமாயா தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில் கால்நடைகளை குறிவைத்து வேட்டையாடி வரும் மர்ம விலங்கால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்