காதலி இறந்த சில நாட்களில் காதலனும் சாவு

ஜாதகம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதால் காதலி இறந்த சில நாட்களில் காதலனும் பரிதாபமாக இறந்தார். சேலத்தில் அடுத்தடுத்து இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-03-17 21:18 GMT
கன்னங்குறிச்சி:-
 ஜாதகம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதால் காதலி இறந்த சில நாட்களில் காதலனும் பரிதாபமாக இறந்தார். சேலத்தில் அடுத்தடுத்து இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காதலர்கள்
சேலம் சின்ன திருப்பதி சாந்திநகரை சேர்ந்த முருகேசன் மகன் ரவிகிரண் (வயது 29). டிரைவர். இவர், ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் மலர்விழி (23) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. அதற்காக அவர்கள், இருவரும் ஒன்றாக ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்த்தனர்.
அடுத்தடுத்து சாவு
அப்போது ஜாதகம் சரியில்லை என்றும், திருமணம் செய்து கொண்டால் உங்களது வாழ்க்கை சரியாக அமையாது என்றும் ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாதே என்று வேதனை அடைந்தனர்.
இதில் மனம் உடைந்த மலர்விழி கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்ததை அறிந்த ரவிகிரணும் சோகத்தில் மூழ்கினார். காதலி இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த ரவிகிரண், எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜாதகம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதால் காதலர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்