அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-17 21:18 GMT
சேலம்:-
அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ் கண்டக்டர்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 45). அரசு பஸ் கண்டக்டர். சேலத்தை சேர்ந்தவர் சக்திவேல். டிரைவர். கடந்த 14-ந்தேதி இரவு வாழப்பாடியில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சை டிரைவர் சக்திவேல் ஓட்டி வந்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த சிலர் பஸ்சை மறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறி டிரைவர் சக்திவேல், கண்டக்டர் சிவப்பிரகாசம் ஆகிய 2 பேரையும் தாக்கினர்.
கைது செய்தனர்
இதுகுறித்து இருவரும் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கதிரவன் (வயது 19), பீர்பாபு என்பவரது மகன் இம்ரான் (19) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிரைவர், கண்டக்டரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்