ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்
ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் நிலையம் முன்பு ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சாலையில் வந்த வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகும் என்றும் அறிவுரை வழங்கினர்.