வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

ஒரத்தநாடு ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-17 19:56 GMT
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி  திட்ட  பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருமங்கலக்கோட்டையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி, பெரியகுமுளை -வேதவிஜயபுரம் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை  கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வடசேரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும், கழிவறை வசதி சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
இதேபோல் வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் குறித்த பதிவேடு, தொற்று நோயாளிகளுக்கான அறை, பிரசவ அறை, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், தடுப்பூசி போடும் இடம், மருந்து கிடங்கு போன்ற இடங்களையும், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். வடசேரி அங்கன்வாடி மையம், பொது வினியோக அங்காடி உள்ளிட்டவைகளையும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். 
 இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரகுநாதன் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்