சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
வேலாயுதம்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம் அண்ணா நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய் துறையினர் அகற்றினர். இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்ட புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உள்பட 30 பேர் மீது வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்தார்.