கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-17 19:42 GMT
சிவகிரி:
சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, சிவகிரி குமாரபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 62) என்பவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து சோதனை செய்தபோது 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தார்.

மேலும் செய்திகள்