வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளி போனதால் வாலிபர் தற்கொலை

வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளி போனதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-17 19:40 GMT
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சாமியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 29). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
 கடந்த 2 ஆண்டுகளாக பெண் பார்த்தும் திருமணம் நடைபெறாமல் தடைப்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த முனியப்பன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளி போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்