பயங்கர ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது
சிவகங்கை அருகே அரை கிலோ கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை அருகே அரை கிலோ கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
சிவகங்கையை அடுத்த முத்துபட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் சில வாலிபர்கள் நிற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் தலைமையிலான போலீசார் முத்துபட்டியில் இருந்த 5 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 2 வாள், 2 அரிவாள் மற்றும் அரை கிலோ கஞ்சா ஆகியவை இருந்தது. இதைதொடர்ந்து அவர்களை சிவகங்கை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
5 பேர் கைது
அவர்களிடம் சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி, தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அலுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 24) தேவனிபட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (21) சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்த அருள் நவீன் (22), முத்துப்பட்டியை சேர்ந்த வேல் ராஜன் (20), காளீஸ்வரன் (19) என்றும் இவர்கள் சிவகங்கையை அடுத்த மாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்ல இருந்ததும் தெரிந்தது.
இதை தொடர்ந்து சிவகங்கை தாலுகா போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், செல்போன்கள், கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.