தீ விபத்தில் டீக்கடை எரிந்து சேதம்; தொழிலாளிக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிதி உதவி
தீ விபத்தில் டீக்கடை எரிந்து சேதம் அடைந்ததால், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூபி மனோகரன் எம்எ.ல்.ஏ. நிதி உதவி செய்தார்.
இட்டமொழி:
தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. தொழிலாளியான இவர் அங்குள்ள நாற்கர சாலையோரம் டீக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அந்த டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இந்த நிலையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று கிருஷ்ணன்புதூருக்கு சென்று, தீ விபத்தில் சேதமடைந்த டீக்கடையை பார்வையிட்டு, சின்னத்துரைக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.
காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகை துரை, துணை தலைவர் ஜெயசீலன், மாவட்ட இணை செயலாளர் ராமநாதன், கிருஷ்ணபுதூர் கமிட்டி தலைவர் பொன்னையா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.