கஞ்சா செடி வளர்த்த தந்தை-மகன் கைது
கஞ்சா செடி வளர்த்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் போலீசார் மாரனேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சூர்நாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53), இவருடைய மகன் புவனேஸ்வரன் (21) ஆகியோர் வீட்டின் முன்பு கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.