சூளகிரி முனீஸ்வரர் கோவில் விழாவையொட்டி எருதுவிடும் விழா

சூளகிரி முனீஸ்வரர் கோவில் விழாவையொட்டி எருதுவிடும் விழா

Update: 2022-03-17 17:08 GMT
சூளகிரி:
சூளகிரி முனீஸ்வரர் கோவில் விழாவையொட்டி, எருதுவிடும் விழா நடந்தது.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், பேரிகை சாலையில் உள்ள ரணமந்த குட்டை ஸ்ரீமுனீஸ்வர சாமி கோவில் விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி, சாமிக்கு சிறப்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு வாணவேடிக்கைகளுடன் 50-க்கும் மேற்பட்ட சாமிகளின் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில், சூளகிரி, மாரண்டபள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள், நன்கு அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தன. மைதானத்தில் காளைகளை கட்டவிழ்த்ததும், அவை சீறிப்பாய்ந்து சென்றன.
பரிசுப்பொருட்கள்
 அப்போது ஆர்வமிக்க இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டிச்சென்று அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களையும், அலங்கார தட்டிகளையும் பறிக்க முயன்றனர். அப்போது சிலர் கீழே விழுந்தனர். 
வீரர்களின் பிடியில் சிக்காமல், காளைகள் போக்கு காட்டி சென்றதை கண்டு, கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். விழாவையொட்டி சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்